ஆப்நகரம்

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கேரளத்தில் ஆட்டம் ஆரம்பம்!!

கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கிவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 9:40 pm
கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்தில்தான் மழையை பெறுகின்றன. ஆண்டுதோறும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம்.
Samayam Tamil rain


இந்த வழக்கத்தில் இருந்து மாறாமல், இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. இதற்கு அடையாளமாக, கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம், கர்நாடக மாநிலம் ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் இன்று மழை வெளுத்து வாங்கியது.

இன்று (ஜூன் 1) தொடங்கியுள்ள பருவமழை, தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு நீடிக்கும். இதன் மூலம் நாட்டில் உள்ள 75 சதவீத பகுதிகள் மழையை பெறும்.

இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை வழக்கமான சராசரி அளவான 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாநிலங்களில் தமிழகம் மட்டும்தான், ஒப்பீட்டளவில் தென்மேற்கு பருவமழை காலத்தைவிட, வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பரில் அதிக அளவு மழையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி