ஆப்நகரம்

பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்

பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138-ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2018, 4:27 pm
பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138-ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil PressFreedom-940x580


உலக அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் பின்னுக்குச் சென்றுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட அச்சப்பட வேண்டிய நிலை இருக்கிறது.

இந்தியாவில் உள்ள மத அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிக எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் யாரையும் எளிதாக அணுக முடிவதில்லை.

பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சீர்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. பத்திரிகையாளர்களுக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களை கூட கண்டு கொள்வதில்லை. கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

இப்பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுவும் இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

அடுத்த செய்தி