ஆப்நகரம்

32 ஆண்டுகளில் காணாத தரமான சம்பவம்; வெளுத்து வாங்கிய ஆகஸ்ட் மாதம்!

கடந்த மாதம் வெளுத்து வாங்கிய பலத்த மழை எத்தகைய சாதனையை படைத்துள்ளது என்று இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 1 Sep 2020, 8:34 am
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 327 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. வழக்கமாக 258 மில்லிமீட்டர் சராசரி மழை பெய்யும். இம்முறை 26.7 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இது கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அதிகப்படியான மழை ஆகும். மேலும் சராசரியை விட அதிகமாக பெய்துள்ள மழை சதவீதத்தில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Rainfall in August


இது கடந்த 1901ஆம் ஆண்டிற்கு பிறகு 4வது அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும். இதன்மூலம் நடப்பு பருவமழை காலத்தில் பெய்த மழையானது 9.8 சதவீதம் என்ற கூடுதல் அளவை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 10 சதவீதம் அதிகம் மழை பெய்துவிட்டால், அதுவே நீண்ட கால இடைவெளியில் பெய்த அதிகபட்ச மழையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீரில் தத்தளித்த சிறுவன், காப்பாற்ற வந்த பனை மரம் - அடுத்து நடந்த ஆச்சரியம்!

கடந்த 120 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அவை,

* 1988

* 1963

* 1958

* 1933

* 1926

ஆகிய ஆண்டுகள் ஆகும். நடப்பு பருவமழை காலத்தில் மத்திய இந்தியாவில் 61 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது. இதற்கு வங்கக்கடலில் உருவான தொடர்ச்சியான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளே காரணம்.

கடந்த மாதம் மட்டும் 5 முறை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் மூன்று முதல் நான்கு முறை மட்டுமே தாழ்வு நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி