ஆப்நகரம்

கொரோனா குணமாகிடுச்சு; ஆச்சரியப்படுத்தும் புள்ளிவிவரம் - மீண்டு வருமா இந்தியா?

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 29 Sep 2020, 10:36 am
கடந்த மார்ச் மாதம் முதல் நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் முதல்முறையாக கடந்த திங்கள் அன்று 70 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. ஏனெனில் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவு ஞாயிறு அன்று பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதாவது நாடு முழுவதும் 7.1 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு பிறகு குறைவான எண்ணிக்கை ஆகும்.
Samayam Tamil Coronavirus Recovery


கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு பிறகு பலி எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவாக 800க்கு கீழ் பதிவானது. நேற்று 758 பேர் பலியாகியுள்ளனர். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்றைய தினம் 66,251ஆக சரிந்துள்ளது. இது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு குறைவான எண்ணிக்கை ஆகும்.

அன்றைய தினம் 65,968ஆக பதிவாகியிருந்தது. கடந்த ஞாயிறு அன்று 80 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். தொடர் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து 9.4 லட்சமாக காணப்படுகிறது.

மேலும் தளர்வா, இல்ல மீண்டும் ஊரடங்கா; என்ன நடக்கப் போகிறது அன்லாக் 5.0-ல்?

இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 61,43,019 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50,98,573 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். இது 83 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. 96,351 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 9,47,235 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வந்தாலும் குணமாகும் எண்ணிக்கை மிகுந்த நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. இது கோவிட்-19 பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பலகட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பாதிப்பிலிருந்து பலரும் தப்பித்துக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி