ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு இந்தியா பதிலடி!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமரின் கருத்துகள் ஆதாரமற்றமற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 12:56 am

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil modi-trudeau


போராட்டத்தை தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் விவசாயிகள் பிடிவாதமாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள வீடியோவில், குரு நானக் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. உரிமைகளை பாதுகாக்க அமைதியாக நடைபெறும் எல்லா போராட்டங்களுக்கும் கனடா ஆதரவளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தபாலில் பிரசாதம் வரும்!

ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகளுக்கு ஏற்கெனவே சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துகள் போதிய ஆதாரங்கள் இல்லாதவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பேசியபோது, “விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு பேச்சுவார்த்தையை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி