ஆப்நகரம்

ஒடிசாவில் நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை வெற்றி- மீண்டும் தயாராகும் இந்தியா..??

இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஒடிசாவில் சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதித்து பார்த்துள்ளது.

Samayam Tamil 26 Feb 2019, 4:20 pm
இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஒடிசாவில் சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதித்து பார்த்துள்ளது.
Samayam Tamil ஒடிசாவில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த இந்திய ராணுவம்- காரணம் இதுதான்..!


இந்தியா - பாகிஸ்தான் எல்லை யோரம் அமைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் 12 மிராஜ் 2000 (Mirage 2000 jets) போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்கள் மீது சுமார் 1000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சுமார் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ஒடிசா கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்தியா சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது, ஏவுகணைகள் அதிவேகத்துடன் பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கின.

அதிநவீனமாக தயார் செய்யப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் சுமார் 25 கி.மீ முதல் 30 கி.மீ தொலைவு வரைக்கும் தரையில் இருந்து பாய்ந்து விண்ணில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது.


கடந்த 14ம் தேதி, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்று இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும் சூழ்நிலை வந்தால், அதற்கு ஆயத்தமாக இருக்க இந்தியா விரும்புகிறது. அதற்காக ஒடிசாவில் 2 ஏவுகணைகளை இந்திய ராணுவம் சோதனை செய்து பார்த்துள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் உடன் இணைந்து இந்த ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவற்றின் சோதனையே இன்று ஒடிசா கடற்கரையில் நடந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி