ஆப்நகரம்

இந்தியா-இஸ்ரேல் கூட்டுத்தயாரிப்பு ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தயாரித்துள்ள எம்.ஆர்.எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

TNN 1 Jul 2016, 3:19 pm
சந்திப்பூர்: இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தயாரித்துள்ள எம்.ஆர்.எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
Samayam Tamil india test fires new surface to air missile co developed with israelis
இந்தியா-இஸ்ரேல் கூட்டுத்தயாரிப்பு ஏவுகணை சோதனை வெற்றி


இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இமராத் ஆய்வு மையமும், இஸ்ரேல் விண்வெளி நிறுவனமும் இணைந்து ஹைதராபாத்தில் ஏவுகணைகளை தயாரிக்கின்றன.

அவ்வாறு இரு நாடுகளின் கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள எம்ஆர்எஸ்ஏஎம் நடுத்தர ஏவுகணை 50 முதல் 70 கி.மீ. தூரம்வரை வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு எச்சரிக்கை அனுப்பி வழிகாட்டும் நவீன ரேடாரும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் பறந்த இலக்கை, இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

தொடர்ந்து ஏவுகணையின் பயனாளர் சோதனை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும்.

அடுத்த செய்தி