ஆப்நகரம்

பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை: இந்திய ராணுவம் காட்டம்!

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களையும், பயங்கரவாதிகளையும் திணிக்க முயற்சிக்கும் பழக்கத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Oct 2020, 6:03 pm
Samayam Tamil LoC

ஜம்மூ காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு தருணங்களில் அத்துமீறியதாகவும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் இந்திய ராணுவத்தின் தலைவர் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோஜ் முகுந்த் நரவனே ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, “குளிர் காலம் வருவதற்கு முன் ஏராளமான பயங்கரவாதிகளையும், ஆயுதங்களையும் இந்திய எல்லைக்குள் தள்ள முயற்சிப்பது பாகிஸ்தானின் பழக்கம். இந்த கொடிய பழக்கத்தை பாகிஸ்தன் இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை.

எனினும், நமது பாதுகாப்பு படையினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையே இதற்கு சான்று” என்று தெரிவித்துள்ளார்.

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் அடுத்த ஷாக்; பின்னணியில் நிழல் உலக தாதாவாம்...!

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரையிலான மூன்று வாரங்களில் பாதுகாப்பு படையினரால் மொத்தம் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (அக்டோபர் 14) தங்தர் பகுதியில் 3-4 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஊடுருவ முயன்றபோது, எல்லையில் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் தேடுதல் பணியும், கண்காணிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டது.

அக்டோபர் 10ஆம் தேதியன்று குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் ஏகே 47, குண்டுகள் என பல ஆயுதங்கள் இந்திய எல்லைக்குள் எடுத்துவர முயற்சிக்கப்பட்டது. இதை எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்து தடுத்து நிறுத்திவிட்டனர்.

அடுத்த செய்தி