ஆப்நகரம்

எல்லையில் மீண்டும் பதற்றம்? - நவீன பீரங்கிகளை குவித்த இந்திய ராணுவம்!

அருணாச்சல் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 20 Oct 2021, 8:50 pm
இந்திய - சீன எல்லையில், அருணாச்சல் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Indian_Army_PTI


இந்தியா - சீனா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இது குறித்து இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாமல் உள்ளது. ஒவ்வொரு முறையும், எல்லைப் பகுதியில், இந்தியாவுக்கு சொந்தமானப் பகுதியை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்றார். இடாநகரில் உள்ள சட்டப்பேரவையிலும் அவர் உரையாற்றினார். இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் எதிர்ப்புக்கு மத்திய அரசும் எதிர்ப்புத் தெரிவித்து கருத்துத் தெரிவித்தது.
வெளிநாட்டு பயணிகளுக்கு இது கட்டாயம் - மத்திய அரசு அதிரடி!
இந்நிலையில் இன்று, இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியான அருணாச்சல் பிரதேசம் மாநிலம் தவாங்க் பகுதியில் இந்திய ராணுவம் பெருமளவு நவீன பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இருதரப்பு எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி