ஆப்நகரம்

இடி, மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.

Samayam Tamil 10 May 2018, 4:13 pm
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.
Samayam Tamil indian metorological


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

இன்று மேற்கு வங்களம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். இதனால், இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடும். இதே நிலை ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் நீடிக்கும். ராஜஸ்தானில் புழுதி புயல் ஏற்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பிகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மேகலாயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடற்கரை ஒட்டியுள்ள கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி