ஆப்நகரம்

அமொிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை சுட்டுக்கொன்ற கொள்ளையா்கள்

அமொிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மாணவா் ஒருவரை அந்நாட்டு கொள்ளையா்கள் சிலா் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 30 Dec 2017, 5:02 am
அமொிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மாணவா் ஒருவரை அந்நாட்டு கொள்ளையா்கள் சிலா் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil indian origin student shot dead by armed robbers in us another hurt
அமொிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை சுட்டுக்கொன்ற கொள்ளையா்கள்


அமொிக்காவின் புறநகா் பகுதியில் அமைந்துள்ளது டால்டன் நகா். அங்கு குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஓரா என்வா் எாிவாயு நிலையம் ஒன்றை அமைந்து நடத்தி வந்துள்ளாா். இவரது மகன் அஷ்ரத் ஓரா. இவா் டால்டனில் உள்ள கல்லூாி ஒன்றில் படித்து வருகிறாா். தந்தை வேலை சம்மந்தமாக வெளியில் செல்லும் போது அஷ்ரத் ஓராதான் எரிவாயு நிலையத்தை கவனித்துக் கொள்வாராம்.

இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணியளவில், அஷ்ரத் ஓராவும், அவரது உறவினா் பகா் சயீத்தும் எாிவாயு நிலையத்தில் இருந்துள்ளனா். அப்போது அங்கு வந்த கொள்ளையா்கள் சிலா் எாிவாயு நிலையத்தில் கொல்லையடிக்க முயன்றுள்ளனா்.

ஆனால் இதற்கு அஷ்ரத் ஓராவும், பகா் சயீத்தும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையாா்களில் ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி சுடத்தொடங்கினான். இதில் இருவரும் படுகாயங்களுடன் சுறுண்டு விழுந்தனா். மேலும், அஷ்ரத் ஓரா சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தாா்.

இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை ஆயுத கொள்ளை மற்றும் கொலை வழக்காக டால்டன் காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள் பற்றி தகவல் தருவோருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7½ லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி