ஆப்நகரம்

ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு அரசியல் கட்சிகளிடம் எவ்வளவு பணம் கையிருப்பு இருந்தது தெரியுமா?

ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு அரசியல் கட்சிகளிடம் எவ்வளவு பணம் கையிருப்பு இருந்தது தெரியுமா?

TOI Contributor 29 Jan 2017, 10:45 pm
நாடு முழுவதும் ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள கையிருப்பு பணத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியிடம் ரூ.3.54 கோடி பணம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ.88,468 ரூபாயும் இருப்பது தெரியவந்தது. ஆனால் பெரும்பாலான கட்சிகள் தங்களிடம் எவ்வளவு பணம் கையிருப்பு இருந்தது, ரூபாய் நோட்டு தடையை எப்படி சமாளித்தனர் என்று சொல்லவில்லை.
Samayam Tamil indian political parties fund before demonetisation
ரூபாய் நோட்டு தடைக்கு முன்பு அரசியல் கட்சிகளிடம் எவ்வளவு பணம் கையிருப்பு இருந்தது தெரியுமா?


அதில் முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எந்தவிதமான தணிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. மாநில கட்சிகளான ஆம் ஆத்மி, அசாம் கன பரிசத், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வருவாய் கணக்குகளை தாக்கல் செய்யாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி