ஆப்நகரம்

இனி பிரச்சினையில்லை; வந்தாச்சு செம ஸ்பீட் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்!

மருத்துவ தேவைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய ரயில்வே புதிய ஏற்பாட்டை செய்திருக்கிறது.

Samayam Tamil 19 Apr 2021, 9:10 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுரையீரலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸானது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் ஏற்படும் மூச்சுத் திணறலை தடுக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
Samayam Tamil indian railways to run oxygen express on fast movement with green corridors
இனி பிரச்சினையில்லை; வந்தாச்சு செம ஸ்பீட் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்!


ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் சிலிண்டர்களை கொண்டு சேர்க்க முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு உத்தரவு

மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, வெண்டிலேட்டர், மருந்துகள், ஆக்சிஜன் சப்ளை ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தொழிற்துறை பயன்பாட்டிற்கு சப்ளை செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆக்சிஜன் தட்டுப்பாடு.. மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஐடியா!

தொழிற்துறைக்கு கட்டுப்பாடுகள்

அதேசமயம் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு ஆலைகள், அணுசக்தி கூடங்கள், உணவு மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட 9 தொழிற்துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஜ்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வர ரயில்வே துறையின் உதவியை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் நாடியுள்ளன.


கடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் 'அந்த' ஆசை

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கம்

இதுதொடர்பாக கடந்த 17ஆம் தேதி அன்று ரயில்வே துறை அதிகாரிகள், மாநில போக்குவரத்து ஆணையர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வர இந்திய ரயில்வே நிர்வாகம் சரக்கு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று முதல் பயன்பாடு

இந்த ரயில்களில் டேங்கர் ரயில்கள் ஏற்றப்பட்டு தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இவை இன்று (ஏப்ரல் 19) முதல் தனது பணிகளை தொடங்குகின்றன. இதையொட்டி மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து ஆக்சிஜன் ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டினம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ உள்ளிட்ட நகரங்களுக்கு விரைந்துள்ளன.


மேலும் இறுகிய கட்டுப்பாடுகள்; பொதுமக்களுக்கு புதிய சிக்கல்!

பசுமை வழித்தடம் உருவாக்கம்

முதல்கட்டமாக அதிக நோய்த்தொற்றுக்கு ஆளான மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், அடுத்த சில நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் தொடங்கும். இனி நாட்டின் எந்த மூலையில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் உடனே விரைந்து சென்று பூர்த்தி செய்ய முடியும். ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் விரைவாக செல்வதற்கு பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி