ஆப்நகரம்

நிலம், நீர், ஆகாயத்தில் யோகா செய்து அசத்திய இந்திய ராணுவ வீரர்கள்!

இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு நிலைகளில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

Samayam Tamil 21 Jun 2018, 10:02 am
டெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு நிலைகளில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
Samayam Tamil Yoga in Air


உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 4வது ஆண்டாக கடைபிடிக்கப்படும் யோகா தினத்தை சிறப்பிக்க, லட்சக்கணக்கானோர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

இன்றைய யோகா தினத்தில் இந்திய ராணுவத்தினரின் பங்கு அளப்பறியது. அதாவது நிலம், நீர், ஆகாயம் என மூன்று நிலைகளில் யோகா பயிற்சி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இதன்மூலம் உடல், சிந்தனை, ஆத்மா ஆகிய மூன்றும் ஆரோக்கியமான நிலையில் இருக்க வலியுறுத்தினர்.

இந்திய விமானப் படையினரின் பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி பள்ளியில் 15,000 அடி உயரத்தில் பறந்த படி, ராணுவத்தினர் யோகா செய்தனர். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றை கடைபிடிக்க வலியுறுத்தினர்.

அதேபோல் இந்தோ-திபெத் எல்லையோர காவல்துறை அதிகாரிகள், லடாக் பனிமலையில் 18,000 அடி உயரத்தில் சூர்ய நமஸ்காரம் செய்தனர். அப்போது ஏராளமானோருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது.

வடகிழக்கே அருணாசலப் பிரதேசத்தின் லோஹித்பூரில் பாயும் திகரு ஆற்றில் இறங்கி, ஐ.டி.பி.பி ஜவான்ஸ் யோகா பயிற்சி செய்தனர்.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துணை அட்மிரல் கரம்பிர் சிங், கிழக்கு கப்பற்படையின் தலைமை, கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கப்பலிலும், நீர் மூழ்கிக் கப்பலிலும் யோகா செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் ஐ.என்.எஸ் ஜமுனாவில் ஆயிரக்கணக்கான கப்பற்படை அதிகாரிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் ஐ.என்.எஸ் விராத்திலும் பயிற்சி செய்தனர்.


Indian soldiers capture ‘land, sea and air’ to perform yoga.

அடுத்த செய்தி