ஆப்நகரம்

சுவிஸ் வங்கி முதலீட்டில் இந்தியர்களுக்கு 73வது இடம்!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்தவர்களின் பட்டியலில் 73வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.

Samayam Tamil 1 Jul 2018, 4:16 pm
டெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்தவர்களின் பட்டியலில் 73வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.
Samayam Tamil Swiss Banks


சுவிஸ் தேசிய வங்கி ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் செய்த முதலீடு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் அமெரிக்கர்கள் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளனர். இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி, குருன்செவ், லக்சம்பர்க், கேமன் தீவுகள் உள்ளன.

பிரிக்ஸ் நாடுகளான சீனா 20வது, ரஷ்யா 23வது, பிரேசில் 61வது, தென் ஆப்பிரிக்கா 67வது இடத்தில் உள்ளன. இந்தியா 73வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கு முன்பு, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பனாமா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், சைப்ரஸ், இஸ்ரேல், மெக்சிகோ, பெர்முடா, துருக்கி, குவைத்து மார்ஷல் தீவுகள், கனடா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா, பெலிஜ், இந்தோனேஷியா, செசல்ஸ், ஜிப்ரால்டர், சமவோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன.

இதையடுத்து மொரிஷியஸ் 77வது, வங்கதேசம் 95வது, இலங்கை 108வது, நேபாளம் 112வது, வாட்டிகன் சிட்டி 122வது, ஈராக் 132வது, ஆப்கன் 155வது, பூடான் 203வது, வட கொரியா 205வது இடங்களில் இருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் கடைசியாக பலாவ் 214வது இடத்தில் உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்த டெபாசிட் பணம் 50%ஆக(ரூ.7,000 கோடி) அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின்னர், சுவிஸ் வங்கிகளில் 50.2% அளவிற்கு டெபாசிட் அதிகரித்துள்ளது. இது கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து, அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Indians are in 73rd place of Swiss Bank deposit.

அடுத்த செய்தி