ஆப்நகரம்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இந்த மாதத்தில் வெளியாகும்!

இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Nov 2020, 8:57 pm
கடந்த சுமார் 11 மாதங்களாக கொரோனா வைரஸ் மனித இனத்தின் இயல்பு நிலையையே புரட்டி போட்டுள்ளது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டபிறகும் கொரோனாவின் வேகம் இன்னும் குறையவில்லை. கொரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது.
Samayam Tamil indias covid 19 vaccine candidate covaxin likely to launch in this month
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இந்த மாதத்தில் வெளியாகும்!


கொரோனா தடுப்பூசிக்கு போட்டி

உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்க மிகத்தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இதில் சில தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனையில் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி, மாடெர்னா தடுப்பூசி, பிஃபைசர் தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.

​இந்தியாவின் தடுப்பூசி

இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்து மூன்றாம் கட்ட சோடனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

​எப்போது வெளியாகும்?

கோவாக்ஸின் தடுப்பூசி அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியாகும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசியின் திறன் சிறப்பாக இருப்பதாகவும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வாளரும், கோவிட்-19 சிறப்பு படையின் உறுப்பினருமான ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

​இந்தியாவில் கொரோனா நிலாரம்

இந்தியாவில் இதுவரை 83.6 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 1.24 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி