ஆப்நகரம்

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது: அருண் ஜெட்லி

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

TNN 24 Oct 2017, 7:24 pm
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil indias economy is fast growing fundamentals sound arun jaitley
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது: அருண் ஜெட்லி


இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் அதிவேகமாக முன்னேறும் நாடாக இருந்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் பணமதிப்பிழப்பு திட்டங்களே காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, சுமார் 7 லட்சம் கோடி செலவில் இந்தியாவில் 83 ஆயிரம் கிமீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

India's economy is fast growing, fundamentals sound: Arun Jaitley

அடுத்த செய்தி