ஆப்நகரம்

உலக அளவில் சிறந்து நிற்கும் இந்திய பொருளாதாரம்: அருண் ஜேட்லி

உலக அளவில் இந்திய பொருளாதாரம் சிறந்து விளங்குவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

TNN 6 Jan 2017, 4:43 am
டெல்லி: உலக அளவில் இந்திய பொருளாதாரம் சிறந்து விளங்குவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil indias economy is the one of the best in the world says arun jaitley
உலக அளவில் சிறந்து நிற்கும் இந்திய பொருளாதாரம்: அருண் ஜேட்லி


டெல்லியில் நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அருண் ஜேட்லி, மத்திய அரசு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பெரும் முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்கள் நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி.யை அதிகரிக்க உதவும் என்றும், வங்கிகளில் பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பணமில்லா பரிவர்த்தனை மூலம் நாட்டில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அருண் ஜேட்லி கூறினார்.

India's Economy is the one of the best in the world says Arun Jaitley.

அடுத்த செய்தி