ஆப்நகரம்

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் சிறப்புகள்; நாளை அடிக்கல்!

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே புல்லட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.

TNN 13 Sep 2017, 12:13 pm
மும்பை: பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே புல்லட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.
Samayam Tamil indias first bullet train features
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் சிறப்புகள்; நாளை அடிக்கல்!


நாட்டின் முதல் புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் கலந்து கொள்கின்றனர். அதற்காக ஷின்சோ அபே, விமானம் மூலம் இன்று அகமதாபாத் வந்தடைகிறார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் - சிறப்பம்சங்கள்:

* புல்லட் ரயில் திட்டம்: மும்பை - அகமதாபாத்

* தூரம்: 508 கி.மீ

* ரயில் பாதை: 468 கி.மீ(உயர்மட்ட பாதை) + 27 கி.மீ(சுரங்கப் பாதை) + 13 கி.மீ(தரைப் பாதை)

* திட்டச் செலவு: ரூ.1,10,000 கோடி

* ஜப்பானின் கடனுதவி: ரூ.88,000 கோடி(0.1% வட்டி)

* திருப்பிச் செலுத்தும் காலம்: 50 ஆண்டுகள்(15 ஆண்டுகள் சலுகை)

* புல்லட் ரயில் வேகம்: 320 கி.மீ (அதிகபட்சம் 350 கி.மீ)

Japan PM inaugurates Mumbai-Ahmedabad Bullet Train.

அடுத்த செய்தி