ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மதுரையிலிருந்து விமான சேவை!

முதன்முறையாக மதுரையிலிருந்து தினமும் திருப்பதிக்கு விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Oct 2021, 10:45 am
மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் என ஒரு நாளைக்கு 20 விமானங்கள் இயக்கப்படுகின்றது.
Samayam Tamil tirupati


இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்ளூர் விமான சேவையை தவிர்த்து வெளிநாட்டு விமான சேவையாக துபாய்க்கு மட்டும் வாரம் தோறும் மூன்று நாட்கள் தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமானப் பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானம் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?
இந்த விமானமானது நாள்தோறும் இரண்டு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து முதல் முறையாக திருப்பதிக்கு இண்டிகோ விமான நிறுவனம் தனது விமான சேவையை இயக்க உள்ளது.

மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 4:20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதைத் தொடர்ந்து 4:40க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நகைகளை உருக்கும் திட்டம்: அடேங்கப்பா, இவ்வளவு வருமானமா?
மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது, அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி