ஆப்நகரம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு: புதிய தேர்வு அறிமுகம்!

மத்திய அரசு கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டு புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 16 Nov 2020, 8:58 pm
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. எனினும், தமிழக உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது. நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு மாணவ, மாணவியரின் உயிருக்கும் உலை வைத்துள்ளது.

இதனிடையே, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக எழுந்த புகார்களும் அதன் பேரில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

மீண்டும் ஊரடங்கு வருகிறதா? மூன்றாவது அலையில் உச்சம் தொட்ட கொரோனா!

இந்த நிலையில், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 மத்திய அரசுக் கல்லூரிகளுக்கு நீட் முதுகலை தேர்வில் (PG Courses MD, MS, DM (6 years), MCH (6 years), MDS) இருந்து விலக்களிக்கப்பட்டு, இனி-செட் (INI-CET) என்ற புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திய நிலையில், இனி-செட் தேர்வை எய்ம்ஸ் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி