ஆப்நகரம்

மலத்தை உடலில் தடவிக்கொண்டு சிறையில் இருந்து தப்பிய ஆசாமி

சிறைக்குள்ளேயே மலம் கழித்த அவர் அதனை எடுத்து தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டிருக்கிறார். பின் மற்ற கைதிகள் மீது கழிவைப் பூசப்போவது போல நெருங்கியுள்ளார். அத்துடன் சுற்றிலும் கழிவுகளை வீசியுள்ளார்.

Samayam Tamil 13 Feb 2019, 9:12 pm
கொல்கத்தாவில் சிறைக் கைதி ஒருவர் உடல் முழுவதும் தனது கழிவுகளையே பூசிக்கொண்டு சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
Samayam Tamil 67974090


கொல்கத்தாவின் டாப்சியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி முகமது ஜபீர். இவர் எப்படியாவது சிறையிலிருந்து வெளியேற முடிவுகட்டியுள்ளார். இதற்காக மிக நூதனமான திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சிறைக்குள்ளேயே மலம் கழித்த அவர் அதனை எடுத்து தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டிருக்கிறார். பின் மற்ற கைதிகள் மீது கழிவைப் பூசப்போவது போல நெருங்கியுள்ளார். அத்துடன் சுற்றிலும் கழிவுகளை வீசியுள்ளார்.

என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்த மற்ற கைதிகள் சிறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்து கூச்சலிட்டனர். சிறை அதிகாரிகள் வந்து ஜபீரை மிரட்டி ஒரு மூலையில் அமர வைத்து அவரைக் கழுவ ஏற்பாடு செய்தனர்.

எல்லோரும் தன்னை விட்டு தள்ளி நின்றுகொண்டிருந்த அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜபீர் சிறையிலிருந்து தப்பி ஓட்டம் எடுத்துள்ளார். அவரைத் துரத்திச் சென்ற போலீசார் அவரைப் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.

ஜபீர் நேக்காக ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள பார்க் சர்க்கஸ் பகுதியில் புகுந்து போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், துரதிர்ஷ்டம் பிடித்த ஜபீர் அன்று மாலையே வசமாக மாட்டிக்கொண்டுவிட்டார்.

சீல்தா ரயில்வே ஸ்டேஷன் பக்கம் பதுங்கியிருந்த அவரை போலீசார் லபக்கென்று கைது செய்து வந்து மீண்டும் சிறையில் தள்ளிவிட்டனர். தப்பி ஓடியதற்காக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவாகிவிட்டது!

அடுத்த செய்தி