ஆப்நகரம்

கம்பீரமாக புறப்பட்ட ஐஎன்எஸ் விராட் - கண்ணீரில் மூழ்கிய கடற்படை!

ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் தனது இறுதிப் பயணத்தை மும்பையில் தொடங்கியது.

Samayam Tamil 19 Sep 2020, 6:11 pm

இந்தியா ஏரியாவில் வேவு பார்த்த சீன கப்பல் - உஷாரான இந்தியா!

undefined

விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையின் ஹீரோவாக வலம் வந்தது. இந்த கப்பல் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கப்பலை முழுவதுமாக பிரித்தெடுத்து விற்பனை செய்துவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil INS Viraat


இதற்காக ஐஎன்எஸ் விராட் தனது இறுதிப் பயணத்தை இன்று தொடங்கியது. மும்பையில் இருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் விராட், குஜராத் மாநிலத்தை சேர்ந்த அலாங்கிற்கு செல்கிறது. அங்கு இக்கப்பல் முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு பாகங்களாக விற்பனை செய்யப்படும்.

இப்பயணத்தையொட்டி இன்று மும்பையில் ஐஎன்எஸ் விராட் கப்பலை இழுவைப் படகுகள் இழுத்துச் சென்றபோது, கடற்படையின் மூத்த அதிகாரிகள் உணர்ச்சிவயப்பட்டு பிரியாவிடை கொடுத்தனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் ஐஎன்எஸ் விராட் கடைசி பயணத்தை தொடங்கியபோது அதன் மேல் கடற்படை ஹெலிகாப்டர் சுற்றிக்கொண்டு மரியாதை செலுத்தியது ஐஎன்எஸ் விராட்டுக்கே கம்பீரத் தோற்றத்தை அளித்தது.

ஐஎன்எஸ் விராட் கப்பல் இந்திய கடற்படைக்கு 30 ஆண்டுகள் சேவை செய்துள்ளது. முதலில் இங்கிலாந்து கடற்படையில் ஹெச்எம்எஸ் ஹெர்ம்ஸ் என்ற பெயரில் சேவை செய்து வந்த இந்த கப்பலை இந்திய கடற்படையில் சேர்த்தபிறகு ஐஎன்எஸ் விராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஐஎன்எஸ் விராட் கப்பலை அருங்காட்சியமாகவோ, உணவகமாகவோ மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. குஜராத் மாநிலம் அலாங்கை சேர்ந்த ஸ்ரீராம் குழுமம் இக்கப்பலை பிரித்தெடுப்பதற்கான ஏலத்தை கைப்பற்றியுள்ளது.

மும்பையில் இருந்து ஐஎன்எஸ் விராட் குஜராத் செல்வதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி