ஆப்நகரம்

ஹத்ராஸ் சம்பவத்தில் புதிய திருப்பம்; 3 மாசத்தில் 100 தொலைபேசி அழைப்புகள்!

இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2020, 12:53 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதான தலித் பெண், நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மாத இறுதியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Hathras Rape Case


ஹத்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இதனால் ஹத்ராஸ் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உ.பி மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஹத்ராஸ் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரி பிரமாணப் பத்திரம் - உ.பி அரசு!

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான விசாரணையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி வாயிலாக அடிக்கடி பேசியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றி போலீசார் தரப்பு கூறுகையில் அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020க்கு இடைப்பட்ட 5 மாதங்களில் 100 முறை தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளன. குறிப்பாக உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரருக்கு குற்றவாளியாக கருதப்படும் நபர் பேசியிருக்கிறார்.

இதனை அந்த கிராம மக்கள் பலரும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை அந்த சகோதரரின் பக்கம் திரும்பியுள்ளது.

அடுத்த செய்தி