ஆப்நகரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!

பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 15 Nov 2019, 3:28 pm
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

சிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்!

எனினும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை தாக்கல்

இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு நவம்பர் 15ஆம் தேதி (இன்று) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி

அதன்படி வழங்கப்பட்ட தீர்ப்பில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது, பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி