ஆப்நகரம்

காா்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 May 2019, 5:17 pm
காா்த்தி சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அவா் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது சிபிஐ.
Samayam Tamil Karti Chidambaram 123


மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பு வகித்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக காா்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாகவும் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதவி செய்து ப.சிதம்பரம் மற்றும் கா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காா்த்தி சிதம்பரம் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதனால் இவா் மீதான வழக்கை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அதன்படி காா்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி