ஆப்நகரம்

இரண்டு நாட்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது

தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்வதற்காக இரண்டு நாட்களுக்கு இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி வசதியை நிறுத்திவைப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

TNN 23 Jul 2017, 3:49 am
தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்வதற்காக இரண்டு நாட்களுக்கு இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி வசதியை நிறுத்திவைப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
Samayam Tamil irctc stops booking and cancellation of tickets for two days
இரண்டு நாட்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் (www.irctc.co.in) மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ரத்து செய்வது, உணவுக்கு முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்தலாம்.

இந்த இணையதளத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருப்பதால், இன்றும் நாளையும் இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ரத்து செய்வது முடியாது என்று ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

இன்று (ஜூலை 23ஆம் தேதி) மாலை 6.15 மணி முதல் நாளை (ஜூலை 24ஆம் தேதி) காலை 7 மணி வரை இணையதள சேவைகளை முன்பதிவு மற்றும் ரத்து வசதியை பயன்படுத்த இயலாது.

அடுத்த செய்தி