ஆப்நகரம்

ரயிலில் உணவு விற்பனையை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்

ரயிலில் உணவு விற்பனையை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்

Samayam Tamil 23 Mar 2018, 4:02 am
ரயிலில் உணவு விற்பனையை ஒழுங்குபடுத்தும் நோக்கி பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரத்தை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil utyujk


ரயில்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன என்றும் அவற்றுக்கு பில் கூட கிடைப்பதில்லை என்றும் ஏராளமான புகார்கள் ரயில்வே நிர்வாகத்திடம் குவிந்துள்ளன.

இதன் எதிரொலியாக பில் கொடுக்கவிட்டால் பணம் தர வேண்டாம் என்று ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், உணவுப் பொருட்களுக்கு நியாமான முறையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உதவும் வகையில் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

முதலில் கர்நாடகா - டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக 100 பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் 26 ரயில்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி