ஆப்நகரம்

இரோம் ஷர்மிளா யோகா மருத்துவமனைக்கு மாற்றம்!

மணிப்பூரை சேர்ந்த மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா, யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TNN 29 Aug 2016, 2:16 am
மணிப்பூரை சேர்ந்த மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா, யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil irom sharmila shifted to yoga naturopathy health centre at langol
இரோம் ஷர்மிளா யோகா மருத்துவமனைக்கு மாற்றம்!


அம்மாநிலத்தில் அமலில் உள்ள சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவந்தார். எனினும், அவரை அவ்வப்போது, மணிப்பூர் மாநில அரசு கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்து, திரவ வகை உணவுகளை அளித்துவந்தது.

அதேசமயம், திட வகை உணவுகளை ஒருபோதும் அவர் ஏற்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலான இந்த போராட்டத்தை சமீபத்தில் இரோம் ஷர்மிளா நிறைவுசெய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டு, தேர்தல் அரசியல் மூலமாக, தனது போராட்டத்தை தொடர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து, அவர் உடனடியாக, திட வகை உணவுகளை உண்ண முடியாது என்பதால், அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அவர், மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டு, இம்பால் நகரில் உள்ள யோகா மற்றும் இயற்கை சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு, உடல் உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதற்கான யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சைகளை இரோம் ஷர்மிளா மேற்கொள்வார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி