ஆப்நகரம்

மூடப்படுகிறதா பி.எஸ்.என்.எல்...உண்மை என்ன?

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக பரவிய தகவலை அடுத்து வரும் 18-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Feb 2019, 5:50 pm
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக பரவிய தகவலை அடுத்து வரும் 18-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Samayam Tamil bsnl


செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை தங்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு அளிக்கும் சலுகைகளில் ஒன்றைகூட மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக பரவும் செய்திகள் உண்மையல்ல என்றார். கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்.லின் சேவையையும், மதிப்பையும் மத்திய அரசு உணர்ந்துள்ளதாகவும், பி.எஸ்.என்.எல்லை டிஜிட்டல் தரத்துக்கு மேம்படுத்த தொலைத்தொடர்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செய்திகளில் கூறப்படுவது போல தொலைத் தொடர்புத்துறை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டில் இல்லை என்றும் தொலைத் தொடர்பு சேவையில் முக்கியத்துவம் பெறும் வகையில் பி.எஸ்.என்.எல்.லை தொழில்நுட்ப, பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி