ஆப்நகரம்

இந்தியாவின் ஒரு பகுதியை முதல் முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தங்களுக்கு சொந்தமான பகுதி என்று முதல் முறையாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 May 2019, 7:27 pm
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் முதல் முறையாக குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது.
Samayam Tamil ISIS


ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் உயிாிழந்தாா். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையவா் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து ஐ.எஸ். அமைப்பின் இணையதளமான “Amaq News Agency” அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐ.எஸ். அறிவித்து இருந்தது.

சோபியானில் நடைபெற்ற எண்கவுண்ட்டரில் இஷ்பக் அகமது சோபி என்பவா் கொல்லப்பட்டதாகவும், ஐ.எஸ். வெளியிட்ட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் நடைபெற்ற கொடூரமான தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி