ஆப்நகரம்

பாஜகவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 28 Oct 2018, 4:31 pm
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
Samayam Tamil madhavan-nair-cover-pic
பாஜக-வில் இணைந்தார் மாதவன் நாயர்


கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின், முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி ராமன் நாயர் உள்ளிட்ட 5 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இதுகுறித்து மாதவன் நாயர் கூறுகையில், “நான் சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு பணியாற்றி வந்தேன். தற்போது தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் முறைப்படி இணைந்துள்ளேன். இந்தியாவின் மேம்பாடு குறித்த பிரதமர் மோடியின் எண்ணங்கள் என்னை அதிகளவில் ஈர்த்ததால் பாரதிய ஜனதா கட்சியின் இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி