ஆப்நகரம்

தனியார் செயற்கைக்கோள்களை பயன்படுத்த இஸ்ரோ முடிவு

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த முறையில் செயற்கைக்கோள்களைப் பெற முடிவு செய்துள்ளது.

TNN 22 Jun 2016, 4:22 pm
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த முறையில் செயற்கைக்கோள்களைப் பெற முடிவு செய்துள்ளது.
Samayam Tamil isro looks at private firms to make satellites for india world
தனியார் செயற்கைக்கோள்களை பயன்படுத்த இஸ்ரோ முடிவு

அடுத்த 5 ஆண்டுகளில், தகவல் ஒலிபரப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு உள்பட பல்வேறு வர்த்தகத் தேவைகளுக்காக, இஸ்ரோ சார்பில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் செயற்கைக்கோள்களை விலைக்கு வாங்கி, தேவையை பூர்த்தி செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ், டாடா அட்வான்ஸ்டு மெட்டிரியல் சிஸ்டம்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட 100 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை இஸ்ரோ வரவேற்றுள்ளது. இதற்கிடையே, இஸ்ரோவின் செயற்கைக்கோள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ரூ.300 கோடி முதலீட்டில், புதிய செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, பொதுத்துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி