ஆப்நகரம்

தயார் நிலையில் இன்சாட் 3டிஆர்; இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

வானிலை ஆய்வுக்காக, அதிநவீன அம்சங்களுடன் இஸ்ரோ வடிவமைத்துள்ள இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

TNN 8 Sep 2016, 11:14 am
வானிலை ஆய்வுக்காக, அதிநவீன அம்சங்களுடன் இஸ்ரோ வடிவமைத்துள்ள இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
Samayam Tamil isro set for launch advanced weather satellite insat 3dr today
தயார் நிலையில் இன்சாட் 3டிஆர்; இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

ஆந்திராவின், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., - எப்05 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இதற்கான, 29 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று காலை, 11:10 மணிக்கு தொடங்கியது.

இன்று மாலை 4.10 மணியளவில் இந்த கவுண்ட் டவுன் நிறைவடைய உள்ளது. அதன்முடிவாக, இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜிஎஸ்எல்வி எப் 05 ரக ராக்கெட் விண்ணில் பாயும். வானிலை ஆராய்ச்சியில் மேம்படுத்தப்பட்ட தகவல்களை இந்த செயற்கைக்கோள் அளிக்கும் என்று இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி