ஆப்நகரம்

சந்திரயான் 2 ரெடி; அடுத்த சாதனைக்கு தயாராகும் இந்தியா

அடுத்த மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2018, 12:12 pm
அடுத்த மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil isros chandrayaan 2 lunar mission satellite launch time revealed details here
சந்திரயான் 2 ரெடி; அடுத்த சாதனைக்கு தயாராகும் இந்தியா


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் கே.சிவன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயான் 2 விண்கலம் அடுத்த மாதம் நிலவுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒரு வேளை அடுத்த மாதம் செலுத்த முடியாத பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் ஏவப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் 11 திட்டப்ணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதென்றும் தெரிவித்தார். மேலும், கடலில் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை மீனவர்கள் கண்டறியும் வகையில் மொபைல் ஆப் உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

சந்திரயாண் 2 திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்தில், ரோவர் வாகனத்தை தரையிறக்க இந்தியா முதன்முறையாக முயற்சி செய்யவுள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்.

நிலவின் தென் துருவத்தில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பாறைகள் இருக்கிறது என்றும், அதை ஆராய்ச்சி செய்வதால், உலகம் எப்போது தோன்றியது என்பது குறித்த விபரங்கள் தெரிவதற்கு உதவியாக இருக்கும. சந்திரயான் 2 திட்டமானது, 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி