ஆப்நகரம்

புயலில் இருந்து ராக்கெட் ஏவுதளத்தை எப்படி விஞ்ஞானிகள் காப்பாற்றினர் தெரியுமா?

தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து இஸ்ரோவின் இரு ராக்கெட் ஏவுதளங்களை விஞ்ஞானிகள் காப்பாற்றியுள்ளனர்.

TOI Contributor 13 Dec 2016, 1:17 am
சென்னை: தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து இஸ்ரோவின் இரு ராக்கெட் ஏவுதளங்களை விஞ்ஞானிகள் காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil isros two rocket launch pads in sriharikota escape cyclone vardah fury
புயலில் இருந்து ராக்கெட் ஏவுதளத்தை எப்படி விஞ்ஞானிகள் காப்பாற்றினர் தெரியுமா?


சென்னையை ஒட்டியுள்ள பழவந்தாங்கள் பகுதியில் வர்தா புயல் கரை கடந்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.

சென்னையிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் ஏவுதளம். புயல் இஸ்ரோவுக்கு மிக அருகில் கரையை கடந்திருந்தாலும், ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் எந்த ஒரு பாதிப்பும் அடையவில்லை என இஸ்ரோ இயக்குனர் குன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குன்னி கிருஷ்ணன் பேசுகையில், “வர்தா புயல் பல பகுதிகளில் மிகுந்த சேதங்களை விளைவித்துள்ள நிலையில், இஸ்ரோவில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது

புயல் கோரமாக தாக்கும் என்பதால் அதை மிகவும் நுட்பமாக கண்காணித்து அதன் சேதத்தில் இருந்து ராக்கெட் ஏவுதளம் காப்பாற்ற தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் காரணமாக புயலில் இருந்து ராக்கெட் ஏவுதளம் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவுதளத்தை சீரமைப்பது என்பது மிகவும் சிக்கலானது. அதனால் சேதத்தை தவிர்ப்பது தான் சிறந்தது என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளும், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

நாளை அல்லது நாளை மறுநாள் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள பகுதியில் மரங்களின் உடைந்த கிளைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் GSLV Mk-III ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணியை தற்போது தான் முழுமை செய்துள்ளனர். அதை ஜனவரி 20ம் தேதி நம்பிக்கை வாய்ந்த க்ரையோஜெனிக் இயந்திரம் பொறுத்தப்பட்ட ராக்கெட் மூலம் வீண்ணில் செலுத்தப்படும்.” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி