ஆப்நகரம்

பாஸ்போர்ட்டை முடக்கியதால் வாழ்க்கை முடிந்து விடவில்லை: விஜய் மல்லையா

''இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கியதால் மட்டும் எனது வாழ்க்கை முடிந்து விடவில்லை'' என்று யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 9 Jul 2016, 11:46 am
''இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கியதால் மட்டும் எனது வாழ்க்கை முடிந்து விடவில்லை'' என்று யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil it isnt the end of the world england has always been a home to mel vijay mallaya
பாஸ்போர்ட்டை முடக்கியதால் வாழ்க்கை முடிந்து விடவில்லை: விஜய் மல்லையா


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாமல், தற்போது பிரிட்டனில் அடைக்கலம் அடைந்து இருப்பவர் விஜய் மல்லையா. இவருக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் இவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இவரை இந்தியா கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையா அங்கு நடைபெறும் விழாக்களில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இந்தியா சார்பில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நார்த்தம்டன்ஷையரில் நடந்த பார்முலா 1 பிரிட்டஷ் கிரேன்ட் பிரிக்சில் மல்லையா கலந்து கொண்டார்.

அப்போது அவர் அளித்திருந்த பேட்டியில், ''இந்திய அரசு எனது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்ததால் அனைத்தும் முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. பிரிட்டன் எப்போதும் எனக்கு வீடாக உள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து நான் பிரிட்டனிலும் தங்கி வருகிறேன். ஆதலால், பிரிட்டனை நான் வேறு நாடாக கருதுவதில்லை.

நான் தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் பணியாற்றி வருவதால், சில கிலோ எடைகள் குறைந்துள்ளேன். எனக்கு ரேஸ் பிடிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

வரும் 29ஆம் தேதி மும்பையில் உள்ள சட்ட விரோத பண பரிமாற்ற நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு மல்லையாவுக்கு பத்திரிக்கை விளம்பரங்கள் வாயிலாக அமலாக்கதுறை இயக்குனரகம் நோட்டீஸ் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி