ஆப்நகரம்

வரி செலுத்தலயாம்: கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு

முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில் கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

TNN 19 Apr 2017, 8:38 am
சென்னை: முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில் கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil it raids in gokulam chit funds due to non tax payment
வரி செலுத்தலயாம்: கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு


தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கிளைகளுடன் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய நிதி நிறுவனமாக விளங்கும் கோகுலம் பைனான்சில், ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதற்கிடையில் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரித்துறை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6 மணி முதல், கோகுலம் நிதி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

சென்னை உட்பட 78 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, புதுச்சேரி, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள கிளைகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் நிறுவன அதிகாரிகள் இல்லம், அலுவலகம் உட்பட 36 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. இந்தச் சோதனையில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைசெய்துவருகின்றனர்.

IT raids in Gokulam Chit Funds due to non tax payment.

அடுத்த செய்தி