ஆப்நகரம்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்- டிரம்ப்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு இதுகுறித்து பல தகவல்கள் வந்தன. தக்க சமயத்தில் இதற்கான அறிக்கை வெளியிடுவோம் என பத்திரிகையாளர் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

Samayam Tamil 20 Feb 2019, 9:29 am
2019 புல்வாமா தாக்குதல் இந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
Samayam Tamil trump 2


பிரதமர் மோடி தனது கடுமையான கண்டனைத்தைப் பதிந்து, வீரர்களின் உயிரிழப்பு வீண்போகாது என இரங்கல் தெரிவித்தார். மேலும் இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனைக்குப் பின்னர் பாக்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை நாடு திரும்ப உத்தரவு வழங்கப்பட்டது. பாக்கிஸ்தானின் வர்த்தக அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது, மேலும் பாக்கிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தப் போவதாகவும் கூறியது.

ஜம்மு காஷ்மீரில் முழுக்கடை அடைப்பு நடந்து, பல இடங்களில் வன்முறை வெடித்தது. தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கும் தலா 20 லட்சம் இழப்பீட்டைத் தமிழக அரசு அறிவித்தது. உத்தரப் பிரதேச மாநில அரசு உயிரிழந்த இம்மாநில வீரர்கள் பன்னிரண்டு பேருக்குத் தலா 25 லட்சம் இழப்பீடாக அறிவித்தது

தற்போது இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு இதுகுறித்து பல தகவல்கள் வந்தன. தக்க சமயத்தில் இதற்கான அறிக்கை வெளியிடுவோம் என பத்திரிகையாளர் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி