ஆப்நகரம்

கேரளாவிற்கு மத்திய அரசை காட்டிலும் 20% அதிகமாக நிதி வழங்கிய பொது மக்கள்

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு பொதுமக்கள் நிவாரண நிதியாக வழங்கப்பட்ட தொகை ரூ.713.92 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 2:28 pm
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு பொதுமக்கள் நிவாரண நிதியாக வழங்கப்பட்ட தொகை ரூ.713.92 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Pinarayi Vijayan 1


கேரளாவில் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி 350க்கும் அதிகமானோா் உயிாிழந்தனா். வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்துள்ள கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதம் கணக்கிட முடியாத அளவில் உள்ளதாக அம்மாநில முதல்வா் பினராயிவ விஜயன் தொிவித்துள்ளாா். வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் அவசரகால நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தனா்.

இந்நிலையில் பேரழப்பில் இருந்து கேரளம் மீண்டு வர பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் வெளிப்படையாக அறிவித்தாா். இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனா். மேலும் மருந்து, உணவுப் பொருள், உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் அனுப்பப்படுகின்றன.

கேரளா சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது வரை பொதுமக்கள் வழங்கிய நிவாரண நிதி ரூ.713.92 கோடி என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வழங்கிய நிதியை காட்டிலும் (600 கோடி) 20 சதவீதம் அதிகம். யு.பி.ஐ. இணைய வழியாக ரூ.132.62 கோடியும், பேய் டிஎம் வாயிலாக 43 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக 518.24 கோடியும், முதல்வரை நேரில் சந்தித்து பணம் மற்றும் காசோலையாக வழங்கப்பட்ட பணம் ரூ.20 கோடி என மொத்தமாக ரூ.713.92 நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ள நிவாரணத்திற்காக கேரளா மக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்க வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் கோாிக்கை விடுத்துள்ளாா். இதை ஏற்றுக் கொள்வதாக ஆளுநா் உள்பட பல முக்கிய அதிகாாிகள் ஒப்புதல் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி