ஆப்நகரம்

13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவத்தின் அதிகாலை ஆபரேஷன்!!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகள் வழியாக, ஜம்மு -காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 13 பேரை இந்திய ராணுவம் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றது.

Samayam Tamil 1 Jun 2020, 8:46 pm
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகள் வழியாக ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வந்தது.
Samayam Tamil loc


கடந்த ஆண்டு அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. அதாவது. அதன் ஆட்சி நிர்வாகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து அங்கு பயங்கரவாதிகளின் ஊடுருவல் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை (ஜூன் 1), ரஜெளரி மாவட்டத்துக்குட்பட்ட, நெளசேரா செக்டார் பகுதி வழியாக, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து, ஜம்மு -காஷ்மீருக்குள் ஊடுருவ முயல்வதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

2016 இல் 16 பேர்... 2020இல் 2 பேர்... தொடரும் பாகிஸ்தான் உளவு விவகாரம்

இதையடுத்து, அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். அப்போது ராணுவத்தினரின் கழுகுப் பார்வையில் சிக்கிய 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, மென்தார் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

எத்தனை ரகசியங்கள் வெளியானதோ? உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள் - கெடு விதித்த இந்தியா!

புல்வாமாவில் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை, பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் செயலிழக்க செய்த சம்பவம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி