ஆப்நகரம்

காஷ்மீரிலிருந்து வெளியேறுங்கள்: அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

அமர்நாத் புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2019, 11:50 pm
அமர்நாத் பனிலிங்கத்தை வழிபடுவதற்காக வருகை தந்துள்ள பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனால் யாத்ரீகர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என
Samayam Tamil அமர்நாத் யாத்திரை: காஷ்மீரில் உச்சக்கட்ட பரபரப்பு
அமர்நாத் யாத்திரை: காஷ்மீரில் உச்சக்கட்ட பரபரப்பு


அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளதால் உடனடியாக யாத்ரீகள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் செய்ய முயற்சித்து உள்ளதாகவும், யாத்திரை பாதையில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது என திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

அமர்நாத் யாத்திரை: காஷ்மீரில் உச்சக்கட்ட பரபரப்பு


இந்நிலையில், அமர்நாத் யாத்திரை முடிந்து பக்தர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் மாநில உளவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீரில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அமர்நாத் பக்தர்கள் உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக காஷ்மீர் ராணுவ லெஃப்டினன் ஜெனரல் தில்லன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமர்நாத் புனித யாத்திரை பாதையில் அமெரிக்கத் தயாரிப்பான M-24 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த பாதைகளில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என உறுதியான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமர்நாத் யாத்திரைக்கான பாதைகளில் மேலும் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என்பதை தேடி வருகிறோம். பயங்கரவாதிகள் காஷ்மீர்க்குள் ஊடுருவம் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடிக்கும் என்று கூறினார்.

அடுத்த செய்தி