ஆப்நகரம்

இரண்டாக உடைந்த ஜம்மு காஷ்மீர் - புதிதாக இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Aug 2019, 1:04 pm
இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம், பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்டு வருகிறது. இங்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த போது, சிறப்பு அந்தஸ்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியா உடன் இணைந்தது.
Samayam Tamil Amit Shah New


அதன்படி, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை இம்மாநில மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இவற்றை மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின.

Also Read: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து!

அதேசமயம் பயங்கரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து 90,000 வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

நேற்று இரவு முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் 3 பேர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நடந்த அதிரடி- பதற்றத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்!

இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மசோதா சட்டமாக மாறியது. மேலும் அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

Also Read: Kashmir Latest News: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு ரத்து!

அடுத்த செய்தி