ஆப்நகரம்

அப்படித்தாண்டா நிப்போம்; ஸ்டைலா! கெத்தா!; சீனாவை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்கும் ஜப்பான்...!

டோக்லாம் விவகாரத்தை அடுத்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு ஜப்பான் ஆதரவளித்துள்ளது.

TNN 18 Aug 2017, 8:26 am
டெல்லி: டோக்லாம் விவகாரத்தை அடுத்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு ஜப்பான் ஆதரவளித்துள்ளது.
Samayam Tamil japan backs india says no one should try to change
அப்படித்தாண்டா நிப்போம்; ஸ்டைலா! கெத்தா!; சீனாவை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்கும் ஜப்பான்...!


இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் கெஞ்ஜி ஹிரமட்சூ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய-பூடான் எல்லையான டோக்லாம் பகுதியில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இது இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் சீனாவின் செயலை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய விரும்புகிறது.

முன்னதாக இந்திய-சீன விவகாரத்தில் இரு முறை அமெரிக்கா நேரடியாக தலையிட்டு, உரிய முறையில் தீர்வு காண வலியுறுத்தியது.

அப்போது, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீன் தான், தீவிரவாத செயல்களுக்கு காரணமாக இருப்பதாக அமெரிக்க குறிப்பிட்டது. அதன் பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீனாவின் மீதே தவறு உள்ளதாக கூறி, இந்தியாவின் நடவடிக்கைக்கு ஜப்பான் ஆதரவு அளித்துள்ளது.

இந்திய-சீன பிரச்சனையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இந்தியாவின் செயல்பாடு பூடான் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் ஜப்பான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இருநாட்டு பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாக குறிப்பிட்டார். இதனை மிக முக்கிய நடவடிக்கையாக கருதுவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Doklam stand-off: Japan backs India, says no one should try to change status quo by force.

அடுத்த செய்தி