ஆப்நகரம்

விவசாயிகள் எதிர்ப்பால் பறிபோனதா மோடியின் புல்லட் ரயில் கனவு? ஜப்பான் நிறுவனம் அதிரடி!

புதுடெல்லி: மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Samayam Tamil 26 Sep 2018, 8:38 am
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமானது அகமதாபாத், மும்பை இடையே செயல்படுத்தப்பட உள்ளது. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று. இதற்கு சுமார் ஒரு லட்சம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Bullet Train


ஜப்பான் நாட்டின் நிதியுதவி உடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்திற்கு, கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த சூழலில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக, ஜப்பானின் ஜேஐசிஏ நிறுவனம் நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து NHSRSL எனப்படும் தேசிய அதிவேக ரயில் கழகம் குறிப்பிடுகையில், இந்திய அரசு மற்றும் ஜேஐசிஏ நிறுவனம் இடையே ரூ.640 கோடி கடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை எந்தப் பணமும் இந்திய அரசுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

Japan stops funding for PM Modi dream project Bullet Train plan.

அடுத்த செய்தி