ஆப்நகரம்

நேரு பெயில்; நேதாஜி பாஸ்: சுவாமியின் அடுத்த சர்ச்சை

தில்லியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு கேம்பிரிட்ஜ் தேர்வில் தோல்வியடைந்த ஜவஹர்லால் நேருவின் பெயரைச் சூட்டியது தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 28 Feb 2016, 10:17 pm
கான்பூர்: தில்லியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு கேம்பிரிட்ஜ் தேர்வில் தோல்வியடைந்த ஜவஹர்லால் நேருவின் பெயரைச் சூட்டியது தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil jnu should be cleansed renamed as subhas chandra bose university swamy
நேரு பெயில்; நேதாஜி பாஸ்: சுவாமியின் அடுத்த சர்ச்சை


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி, தில்லி பல்கலைக்கழகம் சுத்தம் செய்யப்பட வேண்டும். தேர்வுகள் முடிந்த பின்னர் 4 மாதங்கள் அதனை இழுத்து மூடி, தகுதியான மாணவர்களை மட்டுமே பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சியடையாத ஜவஹர்லால் நேரு பெயரை பல்கலைக்கழகத்துக்கு சூட்டியது தவறு என்று கூறிய சுவாமி, ஐ.சி.எஸ். தேர்வில் வென்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அடுத்த செய்தி