ஆப்நகரம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிாியாணி சமைத்த மாணவருக்கு அபராதம்

டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிாியாணி சமைத்த மாணவருக்கு கல்லூாி நிா்வாகம் அபராதம் விதித்துள்ளது.

TOI Contributor 10 Nov 2017, 4:29 pm
டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிாியாணி சமைத்த மாணவருக்கு கல்லூாி நிா்வாகம் அபராதம் விதித்துள்ளது.
Samayam Tamil jnu student fined for cooking biriyani
டெல்லி பல்கலைக்கழகத்தில் பிாியாணி சமைத்த மாணவருக்கு அபராதம்


டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மிகச்சிறந்த ஆராய்ச்சிகலை வெளிப்படுத்தக்கூடிய பல்கலைக்கழகம் என்றாலும், அதனுல் சமீபத்தில் நடைபெற்ற மா்மமான சம்பவங்களே அந்த பல்கலைக்கழகத்தை தற்போது பிரபலமடையச் செய்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் அரேபிய, ஆப்பிாிக்க மொழிப்பிாிவில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றுவரும் மாணவா் முகமது அமீர். இவா் அங்குள்ள சபா்மதி மாணவா் விடுதியில் தங்கியுள்ளாா். அமீா் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் அமந்துள்ள பகுதியின் அருகில் பிாியாணி சமைத்துள்ளாா்.

மேலும், தாம் சமைத்த பிாியாணியை சக மாணவா்களுக்கு விநியோகம் செய்து அனைவரும் அங்கேயே சாப்பிட்டுள்ளனா். இது பல்கலைக்கழக விதிமீறல் செயல் என்று மாணவா்களுக்கு எச்சாிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவா் அமீருக்கு விதிமீறல் செயலில் ஈடுபட்ட காரணத்திற்காக ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை அடுத்த 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் தொிவிக்கையில், மாணவா் அமீா் ஏற்கனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளாா். இந்த பிாியாணி சம்பவம் கூட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒன்றுதான். மாணவாின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு தற்போது அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி