ஆப்நகரம்

Article 370: எனக்கு புரிஞ்சிடுச்சு; சிதம்பரம் கைதுக்கு பின்னணி இதுதான் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு உண்மையான பின்னணி இதுதான் என்று கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 22 Aug 2019, 11:53 am
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், இந்த ஒட்டுமொத்த விஷயமும் அரசியல் பின்புலம் கொண்டது.
Samayam Tamil Karti Chidambaram


2008ல் நடந்த சம்பவத்திற்கு, 2017ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நான் 4 முறை ரெய்டிற்கு உட்படுத்தப் பட்டேன். எனக்கு 20 முறை சம்மன் அனுப்பப்பட்டது. இதையொட்டி 10 - 12 மணி நேரம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்.

Also Read: சிதம்பரம் கைதும்...டெல்லியியை கலக்க இருக்கும் திமுக போராட்டமும்...!!

சிபிஐயின் விருந்தினர் போன்று 11 நாட்கள் இருந்தேன். என்னைச் சார்ந்த பிறருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எந்தவொரு வழக்கும் இல்லை.

எனக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது, காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி மட்டுமே. இது எனது தந்தையை மட்டுமே குறிவைக்கும் செயல் அல்ல.

Also Read: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது- அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

காங்கிரஸ் கட்சியையும் குறிவைத்து செயல்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளேன். பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

சிபிஐ விசாரணையின் போது, என் முன்னால் இந்திராணி முகர்ஜியை ஒருமுறை அமர்ந்திருந்த போது பார்த்துள்ளேன். நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அந்த நிறுவனத்திடம் எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை என்று கூறினார்.

Also Read: என் தந்தை எங்கேயும் ஓடி ஒளியவில்லை: கார்த்தி சிதம்பரம்!

அடுத்த செய்தி