ஆப்நகரம்

பெங்களூரு லோக்ஆயுக்தா அலுவலகத்தில் நீதிபதிக்கு கத்திகுத்து

பெங்களூருவில் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்குள் நுழைந்த மா்ம நபா்கள் நீதிபதியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Mar 2018, 4:44 pm
பெங்களூருவில் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்குள் நுழைந்த மா்ம நபா்கள் நீதிபதியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil justice attacked in karnataka
பெங்களூரு லோக்ஆயுக்தா அலுவலகத்தில் நீதிபதிக்கு கத்திகுத்து


கா்நாடகா தலைமைச் செயலகமான விதான் சௌகா அருகே லோக் ஆயுக்தா அலுவலகம் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி அலுவலகத்தில் வைத்து வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தாா். அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்த தேஜராஜ் ஷா்மா என்ற நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென நீதிபதியை தாக்கத் தொடங்கினாா்.

சப்தம் கேட்டு உடனடியாக அலுவலகத்திற்குள் வந்த பாதுகாப்பு அதிகாாிகள் தேஜராஜ் மேற்கொண்டு நீதிபதியை தாக்காமல் இருக்குமாரு அவரை தடுத்து பிடித்தனா். இருப்பினும் நீதிபதிக்கு வயிறு, நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து நீதிபதி உடனடியாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.



தகவல் அறிந்த கா்நாடகா முதல்வா் சித்தராமையா மற்றும் அமைச்சா்கள் நீதிபதி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனா். மேலும் நீதிபதிக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்குமாறு மருத்துவமனை நிா்வாகிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் துறையினா் தேஜராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நீதிபதி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி