ஆப்நகரம்

காங்கிரஸில் இருந்து சிந்தியா விலகல்; கட்சியும் நீக்கியது - அப்படினா ம.பி.யில் ஆட்சி நீடிக்குமா?

பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியுள்ளார்.

Samayam Tamil 10 Mar 2020, 1:02 pm
மத்தியப் பிரதேச அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். மேலும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் திடீரென தலைமறைவானதாக செய்திகள் வெளிவந்தன. அவரை தொடர்பு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை.
Samayam Tamil Scindia Resigns


இதன் காரணமாக அமைச்சரவையை மாற்றி அமைக்க முதலமைச்சர் கமல்நாத் திட்டமிட்டார். இதற்காக 20 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை இன்று திடீரென பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு மத்தியப் பிரதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருவேளை பாஜகவில் இணைந்தால் சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறக்கூடும்.

இதனால் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி கவிழக்கூடும். பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர அதிக வாய்ப்பு ஏற்படும். கர்நாடகாவில் செய்த அதே யுக்தியை மத்தியப் பிரதேசத்தில் களமிறக்க பாஜக திட்டமிடும்.

மோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்சி? - ம.பி அரசியலில் பரபரப்பு!

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு காங்கிரஸில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திருக்கிறேன். தற்போது அக்கட்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸில் இருக்கும் வரை நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில நிமிடங்களில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் சிந்தியா பாஜகவில் சேர அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கவிழுமா? நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி